ஞாயிறு, 24 ஏப்ரல், 2011

மின்னலே நீ வந்ததேனடி - மே மாதம்

Lyrics: Vairamuthu
Singer: S P Balasubramaniam

மின்னலே நீ வந்ததேனடி
என் கண்ணிலே ஒரு காயம் என்னடி
என் வானிலே
நீ மறைந்து போன மாயம் என்னடி
சில நாழிகை நீ வந்து போனது
என் மாளிகை அது வெந்து போனது
மின்னலே என் வானம்
உன்னை தேடுதே (2)

கண் விழித்துப் பார்த்தபோது களைந்த வண்ணமே - உன்
கைரேகை ஒன்று மட்டும் நினைவுச்சின்னமே
கதறிக் கதறி எனது உள்ளம் உடைந்து போனதே - இங்கு
சிதறிப்போன சில்லில் எல்லாம் உனது பிம்பமே
கண்ணீரில் தீவளர்த்துக் காத்திருக்கிறேன் - உன்
காலடித்தடத்தில் நான் பூத்திருக்கிறேன்

(
மின்னலே)

பால்மழைக்குக் காத்திருக்கும் பூமி இல்லையா - ஒரு
பண்டிகைக்குக் காத்திருக்கும் சாமி இல்லையா
வார்த்தை வரக் காத்திருக்கும் கவிஞர் இல்லையா - நான்
காத்திருந்தாள் காதல் இன்னும் நீளுமில்லையா
கண்ணீரில் தீவளர்த்துக் காத்திருக்கிறேன் - உன்
காலடித்தடத்தில் நான் பூத்திருக்கிறேன்

(
மின்னலே)

மார்கழிப் பூவே

Lyrics: Vairamuthu
Singer: Shobha Shankar

மார்கழிப் பூவே மார்கழிப் பூவே
உன்மடி மேலே ஓரிடம் வேண்டும்
மெத்தை மேல் கண்கள் மூடவும் இல்லை
உன் மடி சேர்ந்தால் கனவுகள் கொள்ளை (மார்கழி)

பூக்களைப் பிரித்து புத்தகம் படிப்பேன்
புல்வெளி கண்டால் முயல் போல் குதிப்பேன்
நான் மட்டும் இரவில் தனிமையில் நடப்பேன்
நடைபாதைக் கடையில் தேநீர் குடிப்பேன்
வாழ்கையின் ஒரு பாதி நான் எங்கு ரசித்தேன்
வாழ்கையின் மறு பாதி நான் என்றும் ரசிப்பேன்
காற்றில் வரும் மேகம் போலே நான் எங்கும் மிதப்பேன்
(
மார்கழி)

(
வெண்பா பாடி வரும் வண்டுக்கு
செந்தேன் தந்துவிடும் சிறுபூக்கள்
கொஞ்சம் பாட வரும் பெண்ணுக்கு
சந்தம் தந்து விடும் மைனாக்கள்) (2)

காவேரிக் கரையில் நடந்ததுமில்லை
கடற்கரை மணலில் கால் வைத்ததில்லை
சுதந்திர வானில் பறந்ததுமில்லை
சுடச் சுட மழையில் நனைந்ததும் இல்லை
சாலையில் நானாகப் போனதுமில்லை
சமயத்தில் நானாக ஆனதுமில்லை
ஏழை மனம் காணும் இன்பம் நான் காணவில்லை
(
மார்கழி)

(
வெண்பா)

என் மேல் விழுந்த மழைத் துளியே - மே மாதம்

Lyrics: Vairamuthu
Singer: Jayachandran, Chitra

என் மேல் விழுந்த மழைத் துளியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
இன்று எழுதிய என் கவியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்

என்னை எழுப்பிய பூங்காற்றே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
என்னை மயக்கிய மெல்லிசையே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
உடம்பில் உறைகின்ற ஓருயிர் போல்
உனக்குள் தானே நான் இருந்தேன் (என் மேல்)

மண்ணைத் திறந்தாள் நீரிருக்கும் - என்
மனதைத் திறந்தாள் நீயிருப்பாய்
ஒளியைத் திறந்தாள் இசை இருக்கும் - என்
உயிரைத் திறந்தாள் நீயிருப்பாய்
வானம் திறந்தாள் மழை இருக்கும் - என்
வயதைத் திறந்தாள் நீயிருப்பாய்
இரவைத் திறந்தாள் பகல் இருக்கும் - என்
இமையைத் திறந்தாள் நீயிருப்பாய் (என் மேல்)

மண்ணும் விண்ணும் உரசுகையில்
என்ன பாஷை பேசிடுமோ
அலையும் கடலும் உரசுகையில்
பேசும் பாஷை பேசிடுமோ
காற்றும் மலையும் உரசுகையில்
என்ன பாஷை பேசிடுமோ
பார்வை ரெண்டும் பேசிக்கொண்டால்
பாஷை ஊமை ஆய்விடுமோ (என் மேல்)