ஞாயிறு, 10 மே, 2009

மெக்குலத்தை தூக்கி எறியுங்கள் ஷாருக், உதவிக்கு ஜான் புக்கனனையும் அனுப்பலாம்





இதை எழுத தொடங்கும்போது மறுமடியும் ஒரு மகத்தான இன்னிங்க்சை ஆடியுள்ளார் , மெக்குலம் . ஆசிய வீரர்களை மதிக்காத தன்மை .பி.எல் அணிகள் பலவற்றுக்கு உள்ளது , ராஜஸ்தான் ராயல்சை தவிர பிற அணிகள் ஆசிய வீரர்களின் பலத்தின் மீது நம்பிக்கை வைப்பதில்லை.
எல்லா அணிகளும் ஆஸ்திரேலியே வீரர்களையே பெருமபாலும் நம்புகின்றன. ஆஸ்திரேலியாவின் வார்னே நம் வீரர்கள் மீது வைக்கும் நம்பிக்கையை கூட, மற்ற அணி தலைவர்கள் (தோணி உட்பட) வைப்பதில்லை.


யூசுப் பதான் என்ற ஒரு பேட்டிங் சைத்தானை இந்திய கிரிகெட் அணிக்கு உருவாக்கி தந்ததில் அவருக்கு பெரும் பங்கு உள்ளது. அடுத்து பி எல் ஆரம்பிக்கபட்டதன் நோக்கமாய் சொல்லப்படும் இளம் வீரர்களுக்கு அனுபவம் எனும் குறிகோளையும் அந்த ஒரு அணி மட்டுமே நிறைவேற்றி வருகிறது.
வங்கதேச ஆல்ரௌண்டரான சாகிப் அல் ஹசன் எனும் மிக சிறந்த பேட்டிங் மற்றும் சுழல் பந்து வீச்சாளரை பி எல்லில் அந்த அணி வீரரும் எடுக்கவில்லை. நமது சென்னை அணி ஒரு படி மேலே போய் உலகின் தலை சிறந்ததொரு இங்கிலாந்து வீரரை விலைக்கு வாங்கி வாங்கி கட்டி கொண்டது. இதில் அந்த அணி தலைவர் வேறு இங்கு விளையாடியதால் அவரது கால் முறிந்து போனதாகவும் இது தங்கள் அணிக்கு பெரும் இழப்பு என்றும் கூறுகிறார்.சிரிப்பதை தவிர ஒன்றும் முடியவில்லை.
மல்லையா சாராயத்தில் சம்பாதித்ததை கிரிக்கெட்டில் விடவேண்டும் என்பது அவரது தலை எழுத்து.இவருக்கு பீட்டேர்சன் எனும் உலகின் மிக சிறந்த வீரர் ஒருவர் கிடைத்தார். சாமி! அணியை தோற்கடிக்க இவர் ஒருத்தர் போதும் என்ற போதிலும் துணைக்கு ரெண்டு நியூசி வீரர் கள் பிரமாத படுத்திவிட்டனர்.
சென்னை அணியில் ஜாகோப் ஓரத்தின் இடத்தில் இலங்கையின் துசராவை களம் இறக்கி இருக்கலாம். அவர் மிக சிறந்த வேக பந்து வீச்சாளர் என்பதுடன் பட்டின்கிலும் ஓரளவுக்கு கை கொடுக்க கூடியவர். இவர் இலங்கையின் அடுத்த வாஸ் என்று வர்ணிக்க படுபவர். பிளிண்டோப்பை விட எந்த விதத்திலும் சோடை போகாதவர்.
இதெல்லாம் பரவாயில்லை மேற்கிந்திய தீவுகளை உலக கோப்பையை விட்டு விரட்டி அடித்த வாங்க தேச கேப்டன் அஷ்ரப்புல் மும்பை அணியால் களம் இறக்கபடுவதே இல்லை.
கொல்கத்தா அணியோ அதிக விலைக்கு வாங்கியும் மொர்டசாவை களம் இறக்குவதே இல்லை. இத்தனைக்கும் அவரது பந்து வீச்சு திறமையும் பேட்டிங் பலமும் அனைவரும் அறிந்ததே. இந்த வீரனை விலைக்கு வாங்காமல் இருந்திருந்தால் ஆவது பிறராவது வாங்கி இருப்பார்.இப்படி விலைக்கு வாங்கி ஒருவரது திறமையை முடக்குவது நியாயமா?
இப்படி தொட்டதற்கெல்லாம் பயிற்சியாளரை பிடித்து தொங்கும் மெக்குலத்தை முதலில் தூக்கி எறிந்தால்தான் கொல்கத்தா உருப்படும். கங்குலியை போன்று இளம் வீரர்களை ஊக்குவிக்கும் ஒரு கேப்டனே இப்போது அணியின் தேவை.
சென்னை வெற்றி பாதையில் பயணிப்பதால் இந்திய அணிக்கு ஒரு நன்மை உள்ளது . ரெய்னாவின் தொடரும் அதிரடியும் தோனியின் ஆட்டம் மறுபடியும் வலுவகியுள்ளதும் தான் அது. பத்ரிநாத் படம் கட்டினாலும் அது இந்திய அணிக்கு வந்ததும் செல்லாமல் போவது வருத்தமாய் உள்ளது. இந்த முறை பி எல் சரியில்லை .சிக்ஸர்கள் பறந்தால் ஆடவேண்டிய சிட்டுக்கள் முதல் பத்து ஓவர்கள் பந்து வீசும் அணிக்காக எப்படியும் ஒரு நான்கைந்து முறை ஆடுகிறார்கள். என்ன செய்வது சிக்ஸர் அடிக்காமல் சிட்டுகளை ஆட வைக்க இதை எளிய முறை வேறு உள்ளத என்ன...
பதிவு பிடிஞ்சிருந்தா வோட் பண்ணுங்க இல்லாட்டியும் வோட் பண்ணுங்க ... வேற வழி இல்ல உங்களுக்கு எனக்கும்தான்...


புதன், 4 மார்ச், 2009

பாராளுமன்ற தேர்தலும் படாத பாடு படும் மாணவ கண்மணிகளும்.காணாமல் போன தோழர் அறிவிழியும்.

வந்துடுச்சு அடுத்த தேர்தல் தேதி அறிவிப்பு .இனி நம்ம பசங்களுக்குஇருக்கு ஆப்பு. நமது நாட்டில் தான் தேர்தல் என்றவுடன் பள்ளி கல்லூரிதேர்வுகளை மூன் கூட்டியே நடத்தும் ஒரு அவலம் காணப்படுகிறது.

நம் மாணவ கண்மணிகளில் நகரங்களில் இருப்போரை தவிர ஏனையகிராமப்புற பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் ஆசிரியர்களின் ஊக்குவிப்பாலும்அவர்களது அயராத உழைப்பினாலும் தான் தேர்ச்சியே அடைவர் என்பதுஅனைவரும் அறிந்ததே.

அவர்களுள்ளும் வைரங்கள் இருக்கலாம், எனினும் அவர்களைகண்டறிந்து பட்டை தீட்டுவது ஆசிரியரின் கடமையாகும்.பெரும்பாலானமாணவர்கள் தேர்வுக்கு சில நாட்களுக்கு முன்பே தேர்வை எதிர் கொள்ள தயார்ஆவர் என்பது எனது கருத்து.

அவர்களக்கு ஆசிரியர்கள் சிறப்பு வகுப்புக்கள் மற்றும் தேர்வுகள் வைத்துஅவர்களது தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க செய்வர்.

கல்லுரிகளில் நிலைமை சற்று தேவலாம். மாணவர்கள் தேர்ச்சி பெறாதபட்சத்தில் மறுமுறை எழுதி தேறலாம்.இதற்கான செலவும் குறைவு.இதிலும்சிக்கல் இருக்கிறது அது யாதெனில் இறுதியாண்டு மாணவர்கள் தமது தேறாததேர்வுகள் பலவற்றை தீர்க்கும் பொருட்டு எழுதுவர். அதற்கான கால அளவும்தேர்தல் அறிவிப்பால் மண்ணாகும் என்பது நிதர்சனமான உண்மை.

இப்படி தேர்தல்களை இந்த பருவத்தில் நிகழ்த்துவதை தேர்தல் ஆணையம்சற்று மாற்றலாம் எனினும் காஸ்மீர் போன்ற பகுதிகளில் நிகழும் பருவ காலசீதோசன நிலையை கருத்தில் கொண்டே தேர்தல்கள் இக்காலத்தில்நிகழ்கின்றன.

நம் தமிழகத்தில் இன்னும் கூட்டணி பேச்சுவார்த்தைகள் முடிந்தபாடில்லை. எதிரிகள் இனி நண்பர்கள் ஆவர்; நண்பர்கள் எதிரிகள் ஆவர்.கலைஞர் அவர்களின் தொலைக்காட்சி பெட்டிகளும் எரிவாயு அடுப்புகளும்ஓட்டுகளை அள்ளுமா அல்லது அம்மையார் மற்றும் அவர்களது கூட்டணியின்
புகார்கள் அள்ளுமா என்பதை பொறுத்திருந்து பார்போம்.

நியுசிலாந்தில் அதிரடியாக வெடித்த சேவாக் மற்றும் ரெய்னாவுக்குவாழ்த்துக்கள்.
கிரிக்கெட் வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய கோழைகளுக்கு கண்டனங்கள்.
இத்தாக்குதல் நிகழாமல் இருப்பின் தொடர்ந்து இரண்டு இரட்டை சதங்களைவிளாசிய சமரவீராவுக்கு பாராட்டுகள் குவிந்து இருக்கும்.

இன்றோ அவர் கால்களில் அடிபட்டு அடுத்த தொடருக்கு வெகு நாட்கள்காத்திருக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகியுள்ளார்.அவர் விரைவில் குணம்பெற இறைவனை வேண்டுவோம்.

இலங்கை அணி தலைவர் மகேலே தலைவராக விளையாடும் கடைசிதொடரில் இப்படி அதிர்ச்சியை அளித்த கயவர்கள் நாசமாய் போக.

இலங்கையில் தொடரும் இனபடுகொலைகளும் விரைவில் வீழஇறைவனை வணங்குவோம்.

நண்பர் அறிவிழி அவர்களே எனக்கு இந்த பதிவுலகத்தை அறிமுகம் செய்தார் எனினும் அவர் தற்சமயம் பதிவுகள் இடுவது இல்லை.இதற்கான காரணம் எனக்கு தெரிந்தவரை அவர் பதிவிற்கு அடிமை ஆக தொடங்குவதாக அவருள் எழுந்த ஐயயமே! இது முற்றிலும் உண்மை முன்பு எனக்கு பல விதங்களில் கணினியை விளக்கி கூறிய பதிவிட தொடங்கிய பிறகு பெரும்பாலும் அதனை பற்றியே பேசினார் .

இதனால் வெறுப்பான நான் சில காலம் பதிவிட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் அவர் இதனை விட்டு மீண்டது எனக்கு மகிழ்ச்சியே.

எனினும் அவரை போன்ற மிக நாகரிகமான துடிப்பான ஒரு பதிவர் இனி வருவர்
என்பது கஷ்டம்தான்.எனவே அவர் மீண்டும் பதிவிட வேண்டும் என்பதே எனது ஆசை.

அவரது பிரியம் போல் அவர் மீண்டும் செயல் படவேண்டும் என்பதே எனது ஆசை.

















ஞாயிறு, 1 பிப்ரவரி, 2009

the new survivers in cricket

வியாழன், 25 டிசம்பர், 2008

2008ஆம் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர்கள்














சிறந்த சுழல் பந்துவீச்சாளர் :அஜந்தா மென்டிஸ்


சென்ற ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் இவரது நிலைப்பாடு

3 போட்டிகளில் பங்கேற்று 26 விக்கெட்டுகளை 18.38 எனும் சராசரியோடு கைப்பற்றியுள்ளார்.

ஒரு நாள் போட்டிகளில் இவரது செயற்பாடு

18 போட்டிகளில் பங்கேற்று 48 விக்கெட்டுகளை 10.12 எனும் சராசரியோடு கைபற்றி அசத்தியுள்ளார்.

கிரிக்கெட்டினுள் நுழையும்போதே தன் திறமை முழுவதையும் மிக அற்புதமாக வெளிப்படுத்தி ஜொலித்த மென்டிஸ் தான் இந்த ஆண்டின் மிக சிறந்த பந்து வீச்சாளரும் ஆவார்.

சிறந்த வேக பந்து விச்சாளர்கள்:
இந்த துறையில் இந்த ஆண்டு பலர் ஜொலித்து உள்ளனர்.
டெஸ்ட் போட்டிகளில் தென்னாப்ரிக்காவின் டேல் ஸ்டைன் ,இந்தியாவின் ஜாகிர் கான் ,இஷாந்த் சர்மா ,பாகிஸ்தானின் தன்வீர்,இங்கிலாந்து அணியின் பிளின்டாப் ,ஆஸ்திரேலியாவின் லீ ,ஜான்சன் என இந்த பட்டியல் நீளும்.சில வீரர்களை நான் குறிப்பிடாமல் விட்டிருக்கலாம்.

இவர்களுள் என்னை கவர்ந்தவர் ஜாகீர் கான்.



இவர் தனது இழந்த மீட்டதோடு நில்லாமல் வேகபந்து வீச்சுக்கு ஒத்துழைக்காத இந்திய மைதானங்களிலும் அசத்த கூடிய அளவிற்கு முன்னேறியுள்ளார்.அனுபவ வீரராக இவர் பிற வீரர்களின் பந்து வீச்சில் காணப்படும் குறைகளையும் களைந்து அணிக்கு உற்சாகம் ஊட்டுகிறார். பிறரையும் நல்லவிதமாக செயல் பட தூண்டும் இவரே இந்த ஆண்டின் சிறந்த வேக பந்து வீச்சாளர் ஆவார்.

சிறந்த பீல்டர்கள் :
யுவராஜ் சிங்:ஸ்டைலான தோரணை பாண்டியான இவர பத்தி சொல்லவே வேணாம். பந்த பிடிக்க இவர் எடுக்குற ரிஸ்க் சூப்பர்.


சுரேஷ் ரெய்னா : இந்தியாவின் மிக அற்புதமான பீல்டர்களில் ஒருவர்.தனது திறமைக்கு ஏற்ப துடிப்பாக பீல்டிங் செய்யும் இவர் என் கனவு அணியில் நிரந்தரமானவர்.

இங்கிலாந்து அணியின் காலிங்க் வூட்டின் பீல்டிங் அற்புதம் முப்பத்திரெண்டு வயதிலும் இவரது பீல்டிங் கங்காருவை நியாபக படுத்துகிறது.


சிறந்த விக்கெட் கீப்பர்கள்:
ஆடம் கில்க்ரிஷ்டின் விலகலுக்கு பிறகு சிறந்த விக்கெட் கீப்பர் யார் என்பதில் இந்தியாவின் தோனி ,தென்னாப்ரிக்காவின் பௌச்சர் ,இலங்கையின் சங்கக்கரா ஆகியோரிடேயே பலத்த போட்டி நிலவுகிறது. இனி வரும் காலங்களில் தான் யார் சிறந்த விக்கெட் கீப்பர் என தெரிய வரும்.
 

சிறந்த டெஸ்ட் மட்டையாளர் :
இந்தியாவின் அதிரடி துவக்க வெட்டு சேவக் தான் இந்த ஆண்டின் சிறந்த டெஸ்ட் மட்டையாளர். இந்த குவித்துள்ள ரன்கள் 1492 ஆகும்.



சிறந்த ஒரு நாள் போட்டி மட்டையாளர்:

கவுதம் காம்பிர் தான் இந்த ஆண்டின் சிறந்த ஒருநாள் போட்டி மட்டையாளர் ஆவார்.

சிறந்த அனைத்து ஆட்டக்காரர் :
ஜார்கண்ட் சிங்கம் டோணிதான் அவர்.



இந்த ஆண்டின் சிறந்த வீரர் கவுதம் காம்பிர் ஆவார்.

வரவங்க ஓட்ட போட்டு தாக்குங்கோ!


வெள்ளி, 28 நவம்பர், 2008

ஆபத்தான கடல்பகுதி அரபி கடல் பகுதியா ? இல்லை இந்திய பெருங்கடல் பகுதியா?

இலங்கை அகதிகள் இந்தியாவுக்குள் வரும்போது அவர்களை சோதனை எனும் பெயரில் சூறையாடும் இந்திய கடற்படை கப்பல்கள் ,பாக்கிஸ்தான் கயவர்கள் இந்திய கடல் எல்லைக்குள் நுழைகையில் என்ன செய்து கொண்டிருந்த.

பாகிஸ்தானின் நிலவரம் சில மாதங்களாக கலவரமாக உள்ளபோது அங்கு தற்சமயம் வலுவானவர்கள் தீவிரவாதிகள் என்பதை நமது உளவு துறை உணராதது ஏன் என்ற வினா தற்சமயம் வலுத்துள்ளது.

இலங்கையில் வாழும் நம் தமிழ் சகோதர சகோதிரிகள் இங்கு உயிர் பிழைக்க ஓடி வருவது தான் நமது தேசிய பாதுகாப்புக்கு ஆபத்து ,இந்த கொடியவர்கள் வருகை பற்றி நமக்கு கவலை இல்லை என்று கடற்படை எண்ணியது ஏன்?

வெளிநாட்டு பயணிகளை பிணை கைதிகளாய் வைத்து நம்மை மிரட்டி தம் காரியத்தை நிறைவேற்ற துடிக்கும் இந்த கயவர்கள் நம் எல்லைக்குள் நுழைய காரணம் இந்த கடற்படையின் அலட்சிய போக்கே .

ஒரு நாட்டு கடற்படையின் முக்கிய பணியே தம் நாட்டு கடற்பரப்பில் அந்நியர் நுழைவதை தடுப்பதும் ,தம் நாட்டை சேர்ந்த தேச விரோதிகள் கடற்பரப்பை துஷ்பிரோயோகம் செய்யா வண்ணம் காப்பதும் ஆகும்.

இதனை செய்ய தவறிய அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.சுமார் 150 பேர் உயிரிழக்க காரணம் கொலை வெறி பிடித்த தீவிரவாதிகள் அல்ல ,அவர்கள் இங்கு நுழைய காரணமாய் இருந்த அதிகாரிகளே.தீவிரவாதிகள் எப்போது வாய்ப்பு கிட்டும் இந்திய மக்களின் உயிரோடு விளையாடலாம் என்று காத்துகிடக்கும் கொடியவர்கள் என்பது நாம் அறிந்ததே!

நஞ்சினும் கொடிய அப்பகைவரிடத்து நம் அப்பாவி மக்களை ஒப்படைத்த இந்த கடற்படையை இன்னும் எந்த பதிவரும் சாடதது ஏன்?முதற்கட்டமாக அந்த பிராந்திய தளபதியை பதவி நீக்கம் செய்து ,அவர் மீது விசாரணை நடத்தி அவருக்கு தகுந்த தண்டனை வழங்க வேண்டும்.

தீவிரவாதம் பாகிஸ்தானில் தான் இருக்கிறது என்ற ஒபாமாவின் கூற்று தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத குழுக்களை கைது செய்ய இன்டர்போல் பாகிஸ்தானில் நுழைய வேண்டும் .அந்நாட்டின் அணு சக்தி வளங்கள் எங்கே யார் கண்காணிப்பில் உள்ளது என்பதை கண்டறிய வேண்டும்.

இதை விடுத்து இங்கு வாழும் நம் சகோதர இஸ்லாமியர்களை பழி கூறும் அரசியல்வாதிகளின் பேச்சை கேட்டு நடக்க வேண்டாம்.

அன்பை போதிக்கும் நம் மதங்களின் பண்பை உணராது
அரசியல் போதிக்கும் ஆந்தைகளின் பேச்சை கேட்டு
மனிதம் காப்பது நம் முதல் கடமை.
என்பதை மறந்து மனிதம் அழிப்பதை
மகத்தான செயலாய் கருதும் இந்த
மடையர்கள் திருந்த அருள்செய் இறைவா.

என்று இறைவனை வேண்டி இந்த மிருகங்கள் மனிதர்களாக வேண்டும் என்று கோருவதை தவிர வேறு வழி ஒன்று உண்டென்றால் அது நாம் அவர்களை அழிப்பது ஒன்றேயாகும்.


வியாழன், 27 நவம்பர், 2008

குண்டு வெடிப்புக்கு அஞ்சி ஓடுகிறதாம் இங்கிலாந்து .பேச்ச குறைங்கப்பா !

அய்யோ சாமி ! எனக்கு சிரிக்க தெம்பில்லை ,நம்மக்கிட்டே அடி வாங்க முடியாம பின்னங்கால் பொடனியில் அடிக்க தலை தெறிக்க நம்மள்ட்ட இருந்து தப்பிச்சு ஓட இங்கிலாந்துக்கு காரணம் கிடைச்சுடுட்சு !

குண்டு வெடிப்பு நிகழ்ந்ததால் அவர்களது உயிருக்கு பாதுகாப்பு இல்லையாம் !இது வரை இவர்கள் நாட்டில் எல்லாம் குண்டு வெடிப்பே நிகழ்ந்தது இல்லையா ?

ஆசிய நாடுகள் என்றாலே இங்கிலாந்து,ஆஸ்திரேலியா,நியுசிலாந்து போன்ற வெள்ளையர் நாடுகளுக்கு இளக்காரம் .ஏற்கனேவே இவர்களை வைத்து மினி உலக கோப்பை தொடரை நடத்தி தனது நிதி நிலையை சீராக்க நினைத்த பாகிஸ்தானுக்கு இவர்கள் வைத்த ஆப்பு நாம் அறிந்ததே!

பாகிஸ்தானில் நிலைமை மோசம்தான் எனினும் முறையான பாதுகாப்பு கோருவதை விடுத்து ,நாங்கள் விளையாடமாட்டோம் என்றால் எப்படி ?

நம்முடைய நாட்டில் விளையாடுவதை ரத்து செய்துவிட்டு இவர்கள் வெளியேறுவது நமது மானத்தை வாங்குவது போல் தானே உள்ளது .
இவர்களுக்கு பாதுகாப்பு வழங்க முடியாத அளவிற்கா நம் நாடு உள்ளது.

பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் பாதுகாப்பு விசயத்தில் எவ்வளோவோ வேறுபாடு உள்ளது .இந்தியர்கள் தம் உயிரை கொடுத்தாவது தம் விருந்தினர் உயிரை காப்பரே ஒழிய ,அவர்கள் உயிர் அழிவதை வேடிக்கை பார்க்க மாட்டர்கள்.

குண்டு வைத்த கயவர்களை கூடிய விரைவில் நமது போலிசார் கைது செய்வர்.இது போல் அவர்களது நாட்டில் நடக்குமா ,இவர்கள் நமது நாட்டினரையே தீவிரவாதிகள் என்று கூறியவர்கள் தானே!

ஸ்மித் தலைமை வகிக்காத தென்னாப்பிரிக்க அணியை தோற்கடித்துவிட்டு இங்கு வாய் பேசிக்கொண்டு வந்து வாங்கி கட்டிகொண்டார்கள்.சாம்பியன்ஸ் லீக் தொடருக்கு இவர்கள் இந்தியா வருவார்கள் ,வேறு எதற்கு பணத்தை வேற எங்க இவங்க கண்ல காட்ட போறாங்க !

இவங்க வந்துட்டு போனதுனால ஒரு வழியா யுவராஜும் ,சேவாக்கும் பார்முக்கு திரும்பிட்டாங்க !அதுவரைக்கும் நமக்கு சந்தோசம் .இவர்களோடு பயிற்சி போட்டி விளையாட நினைத்த இந்தியாவுக்கு தான் பேட்லக் .விளையாடமுடியமா போச்சு .

சச்சின் டெண்டுல்கரின் உயிருக்கு மேலா இவர்கள் உயிருக்கு ஆபத்து உள்ளது. தீவிரவாதிகள் அவரது உயிருக்கு விலை வைத்த பின்னரும் தன் நாட்டிற்காக போட்டியில் பங்கேற்க பலமுறை பாகிஸ்தான் சென்று வந்துள்ள அவரது துணிவு இந்த சின்ன பசங்களுக்கு வராது.

இந்திய வீரர்களுக்கு பல முறை இமெயில் மூலமும் தொலைபேசி வழியாகவும் வந்துள்ள மிரட்டல்களை கண்டு இந்தியர்கள் என்றும் அஞ்சியதில்லை .காரணம் நாம் இந்த மண்ணில் சுதந்திர காற்றை சுவாசிக்க பட்ட கஷ்டங்களை விடவா இந்த மிரட்டல்கள் பெரிது என்ற நம் துணிவுதான்.

இப்படிப்பட்ட துணிவை இங்கு நம்மிடம் தோற்றோடும் இந்த பரங்கியரிடம் எதிர்பாக்க முடியுமா .நம்மிடம் தோற்பதை ஏற்க இயலாமல் நம் மீது பழி போடுதல் ,களத்தில் கண்ணிய குறைவாய் நடத்தல்,நிறவெறி கொண்டு உடன் விளையாடுபவர்களை சீண்டுதல்,என்று விளையாட்டு வீரர்களுக்கு ஆகாத செயல்களை புரிந்து வெற்றிமாலை சூடுவது தான் இவர்களது பிறவி குணம் .

இவர்களிடம் எல்லாம் நம்மை அவமான பட செய்த அந்த கயவர்கள் நம் கண்ணில் கிடைத்தால் அவர்களை விசாரணையின்றி தூக்கில் இட வேண்டும்.பாவம் !உயிர் பயம் அனைவருக்கும் உள்ளதுதானே.

இவர்களை சொல்லி என்ன பயன்.கடந்த நான்காண்டுகளில் இது தான் மிக பெரிய குண்டு வெடிப்பு என்று கூறுமளவுக்கு நிகழ்ந்த இந்த பயங்கரத்தை கண்டு இவர்கள் அஞ்சுவதை குறை சொல்ல முடியாது.

அதி சீக்கிரத்தில் குற்றவாளிகளை கைது செய்து இவர்கள் மத்தியில் நமது பலத்தை நிலை நாட்டுவதில் தான் நமது நாட்டின் கவுரவம் அடங்கியுள்ளது.
ஜெய் ஹிந்த்!


திங்கள், 24 நவம்பர், 2008

திருப்பரங்குன்றத்தில் பலர் பார்க்காத அமைதியான அழகிய மலைகோவில் காசிவிஷ்வநாதர் ஆலயம் .

நேற்று கல்லூரியில் செமஸ்டர் தேர்வு முடிந்த பிறகு நண்பர்கள் மற்றும் நண்பிகளோடு திருப்பரங்குன்றத்திற்கு சென்றோம். திருமங்கலம் பகுதியை சேர்ந்த தோழி மலைக்கு பின் புறம் உள்ள மலை கோவிலுக்கு போகலாம் என்றாள்.நாங்கள் செல்லும் வேளையில் மழை தன் வேலையை காட்டிகொண்டிரிந்தது.

நாங்கள் கோவிலுக்கு சென்ற சாலையில் நாங்கள் மட்டுமே தனியே போய்கொண்டிரிந்தோம் .எனக்கு உள்ளுக்குள் திகிலாய் இருந்தது இருந்தாலும் வழக்கம்போல் உடன் வருபவர்களை கலாய்த்து கொண்டு சென்றேன்.

ஏற்கனேவே கோவையில் மருதமலை ,அனுவாவி சுபரமனியர் கோவில் போன்ற இடங்களுக்கு நான் சென்றிருக்கிறேன்.நான் மதுரையில் அமைந்திருக்கும் இந்த கோவிலை எப்படி தவற விட்டேன் என தெரியவில்லை .அழகர் கோவில் ஒன்றுதான் மதுரையில் இயற்கை எழில் சூழ்ந்த இடம் என நான் நினைத்திருந்தது என்னுடைய தவறு என்பதை காசி விச்வநாதர் ஆலயம் கூறுவதை போல் கோவிலுக்கு எதிரே அமைந்திருந்த கண்மாய் பசுமையாக காட்சியளித்தது.
மலை அடிவாரத்தில் ஒரு கடை கூட இல்லாமல் அமைதியாக இருந்தது அனுவாவி கோவிலை நினைவு படுத்தியது.படியேறுவதற்குள் கால்கள் தளர்ந்து போய் விடுமோ என்று என்ன தோன்றும்படி செங்குத்தான படிகள் பள்ளிகட்டு சபரி மலைக்கு என்னும் பாடலை நினைவு படுத்தியது.

மழை பெய்ததால் மலையின் வழியே வழிந்தோடிவந்த மழை நீர் பார்க்க நன்றாக கண்களுக்கு குளுமையாக இருந்தது.சாரல் மழையின் நடுவே நனைந்து கொண்டு அந்த படிகளின் வழியே ஏறினோம் .வழியில் ஆங்காங்கு இருந்த பாறைகளின் மேல் நின்று நண்பர்கள் புகைப்படம் எடுத்து கொண்டோம்.

பெண்கள் தனியே தத்தம் தோழிகளுடன் புகை படம் எடுத்து கொண்டனர் .
நாங்கள் மழை காலத்தில் செல்லும்போதே மலை ஏறுவது கடினமாக இருக்கிறது .வெயில் காலத்தில் இங்கு சென்று திரும்புவது மிக கடினம்.குடிநீருக்காக போடப்பட்ட பல குழாய்கள் நம் மக்களின் கைங்கரியத்தால் காணாமல் போய் விட்டன .

தண்ணீருக்காக மிகவும் சிரமபட்டோம் கடைசியில் மலை மீது இருந்த ஒருகடையில் தண்ணீரை விலை கொடுத்து வாங்கினோம்.குடிக்கும் தண்ணீரை காசு கொடுத்து வாங்கும் அவலம் என்று மாற போகிறதோ!

இப்படி பலவித தடங்கல்கள் இருந்தாலும் மலையேறும் பொது உடன் வந்த நண்பர்களுடன் சந்தோசமாக பேசி சிரித்தபடி மலை ஏறியது நல்ல அனுபவமாக இருந்தது.சீன மொபைல்களில் நம் தமிழ் படங்களின் பாடல்களை கேட்டு கொண்டே ரசித்தபடி அவரவர் கோணங்களில் ஏதோ மிக பெரிய சினிமா விமர்சகர் போல் திரை படங்களை பற்றி விவாதித்து கொண்டு சென்றோம்.

கோவிலுக்கு செல்லும்போதாவது இது போல் திரைப்படங்களை பற்றி பேசாது செல்வது நம்மால் முடியாதோ என்று தோன்றுகிறது.மலையில் நிறைய மரங்கள் இல்லை என்றபோதும் குளிர் கொடைக்கானலை நியாபகப்படுத்தியது.

மொத்தம் அறநூறு படிக்கட்டுகள் ஒவ்வொன்றும் என் முழங்கால் உயரம் இருந்தது .ஏறி இறங்கியதும் ஒன்றும் தெரியவில்லை .இன்றுதான் தொடை வலிக்க ஆரம்பித்துள்ளது.

  இவ்வளவு சிரமத்தின் நடுவேயும் மேலே சென்று இறைவனை கண்டவுடன் மனதில் ஏற்பட்ட அமைதியை சொல்ல வார்த்தைகள் இல்லை .அமைதி தவழும் அன்னை விசாலாட்சியின் முகத்தை பார்த்துக்கொண்டே இருக்கலாம் போலிருந்தது.

இப்படி மிகவும் மகிழ்ச்சியாய் எங்கள் பயணம் அமைந்தது .மதுரைக்கு வரும் சுற்றுலா பயணிகள் திருபரங்குன்றத்திற்கு செல்ல நேர்ந்தால் சரவண பொய்கை அருகேயுள்ள இதனை காண தவறாதிர்கள் .

வரவங்க இந்த கோவில் குறித்து பலர் தெரிந்து கொள்ள ஓட்டு போட்டு இந்த பதிவ பாப்புலர் ஆக்குங்க!