வியாழன், 25 டிசம்பர், 2008

2008ஆம் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர்கள்


சிறந்த சுழல் பந்துவீச்சாளர் :அஜந்தா மென்டிஸ்


சென்ற ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் இவரது நிலைப்பாடு

3 போட்டிகளில் பங்கேற்று 26 விக்கெட்டுகளை 18.38 எனும் சராசரியோடு கைப்பற்றியுள்ளார்.

ஒரு நாள் போட்டிகளில் இவரது செயற்பாடு

18 போட்டிகளில் பங்கேற்று 48 விக்கெட்டுகளை 10.12 எனும் சராசரியோடு கைபற்றி அசத்தியுள்ளார்.

கிரிக்கெட்டினுள் நுழையும்போதே தன் திறமை முழுவதையும் மிக அற்புதமாக வெளிப்படுத்தி ஜொலித்த மென்டிஸ் தான் இந்த ஆண்டின் மிக சிறந்த பந்து வீச்சாளரும் ஆவார்.

சிறந்த வேக பந்து விச்சாளர்கள்:
இந்த துறையில் இந்த ஆண்டு பலர் ஜொலித்து உள்ளனர்.
டெஸ்ட் போட்டிகளில் தென்னாப்ரிக்காவின் டேல் ஸ்டைன் ,இந்தியாவின் ஜாகிர் கான் ,இஷாந்த் சர்மா ,பாகிஸ்தானின் தன்வீர்,இங்கிலாந்து அணியின் பிளின்டாப் ,ஆஸ்திரேலியாவின் லீ ,ஜான்சன் என இந்த பட்டியல் நீளும்.சில வீரர்களை நான் குறிப்பிடாமல் விட்டிருக்கலாம்.

இவர்களுள் என்னை கவர்ந்தவர் ஜாகீர் கான்.இவர் தனது இழந்த மீட்டதோடு நில்லாமல் வேகபந்து வீச்சுக்கு ஒத்துழைக்காத இந்திய மைதானங்களிலும் அசத்த கூடிய அளவிற்கு முன்னேறியுள்ளார்.அனுபவ வீரராக இவர் பிற வீரர்களின் பந்து வீச்சில் காணப்படும் குறைகளையும் களைந்து அணிக்கு உற்சாகம் ஊட்டுகிறார். பிறரையும் நல்லவிதமாக செயல் பட தூண்டும் இவரே இந்த ஆண்டின் சிறந்த வேக பந்து வீச்சாளர் ஆவார்.

சிறந்த பீல்டர்கள் :
யுவராஜ் சிங்:ஸ்டைலான தோரணை பாண்டியான இவர பத்தி சொல்லவே வேணாம். பந்த பிடிக்க இவர் எடுக்குற ரிஸ்க் சூப்பர்.


சுரேஷ் ரெய்னா : இந்தியாவின் மிக அற்புதமான பீல்டர்களில் ஒருவர்.தனது திறமைக்கு ஏற்ப துடிப்பாக பீல்டிங் செய்யும் இவர் என் கனவு அணியில் நிரந்தரமானவர்.

இங்கிலாந்து அணியின் காலிங்க் வூட்டின் பீல்டிங் அற்புதம் முப்பத்திரெண்டு வயதிலும் இவரது பீல்டிங் கங்காருவை நியாபக படுத்துகிறது.


சிறந்த விக்கெட் கீப்பர்கள்:
ஆடம் கில்க்ரிஷ்டின் விலகலுக்கு பிறகு சிறந்த விக்கெட் கீப்பர் யார் என்பதில் இந்தியாவின் தோனி ,தென்னாப்ரிக்காவின் பௌச்சர் ,இலங்கையின் சங்கக்கரா ஆகியோரிடேயே பலத்த போட்டி நிலவுகிறது. இனி வரும் காலங்களில் தான் யார் சிறந்த விக்கெட் கீப்பர் என தெரிய வரும்.
 

சிறந்த டெஸ்ட் மட்டையாளர் :
இந்தியாவின் அதிரடி துவக்க வெட்டு சேவக் தான் இந்த ஆண்டின் சிறந்த டெஸ்ட் மட்டையாளர். இந்த குவித்துள்ள ரன்கள் 1492 ஆகும்.சிறந்த ஒரு நாள் போட்டி மட்டையாளர்:

கவுதம் காம்பிர் தான் இந்த ஆண்டின் சிறந்த ஒருநாள் போட்டி மட்டையாளர் ஆவார்.

சிறந்த அனைத்து ஆட்டக்காரர் :
ஜார்கண்ட் சிங்கம் டோணிதான் அவர்.இந்த ஆண்டின் சிறந்த வீரர் கவுதம் காம்பிர் ஆவார்.

வரவங்க ஓட்ட போட்டு தாக்குங்கோ!