வெள்ளி, 24 அக்டோபர், 2008

தீபாவளியும் எனது பாவமும்

எனது மனசாட்சியின் கேள்விகளுக்கு பதில் கொடுக்கும் பொருட்டு இந்த சம்பவத்தை உங்களிடம் கூறி ஆறுதல் தேட விழைகிறேன் .
என் தந்தை 3 வயது குழந்தையாக இருந்த போதே அவரது அப்பா இறந்து விட்டாராம் .அதன் பிறகு எனது அப்பா ,சித்தப்பா ,அத்தை ஆகியோரை எனது
பாட்டியும் அவரது தாயும் இணைந்து மிகுந்த சிரமத்திர்க்கிடேயே வளர்த்தர்கலாம்.
என் அப்பா மிகுந்த போக்கிரிதனதுடன் ,கிராமத்து வாலிபர்களுக்கேயுரிய குறும்புடன் சேட்டைகள் செய்வாராம்.
இப்படி ஒரு முறை என் சித்தப்பாவால் என் அப்பா ஒருவரை அடித்து ரத்த காயம் ஆகிவிட்டதாம் .இதனால் என் அப்பாவை திருத்தும் பொருட்டு அவர்கள் பிறந்த ஊரான தஞ்சையிலிரிந்து மதுரைக்கு அழைத்து வந்தார்களாம் .
இங்கு வந்த பிறகு அச்சக தொழிலை தன் மாமாவின் மூலமாக என் அப்பா கற்று கொண்டார் .பிறகு மாமா தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் வேறு ஊருக்கு சென்று விட்டார் .பிறகு என் பாட்டி எங்கள் வீட்டில் சிறிது காலம் இருந்தார் .
எங்கள் வறுமையை நீக்கும் பொருட்டும் எனது கல்வி செலவுகளை சமாளிக்கும் பொருட்டும் வயது முதிர்ந்த நிலையிலும் வீட்டு வேலைக்கு சென்றார் .
பிறகு நான் எங்கள் குடும்ப வறுமை காரணமாக ,என் படிப்பை பாதியில் விட நேர்ந்தது .பிறகு என் அத்தை என்னை படிக்க வைப்பதாக கூறி கோவைக்கு அழைத்தார்கள் .இதற்கு காரணம் எனது பாட்டிதான்.
அவர் என்னை படிக்க வைக்கும் பொருட்டு எனது அத்தை அவர்களிடம் எடுத்து கூறி அவர்களை சம்மதிக்க வைத்திருக்கிறார் .இதை தொடர்ந்து நான் மறுபடியும்
பள்ளி செல்ல தொடங்கினேன் .
இவ்வாறு நான் கோவையில் இருந்த காலத்தில் எனது பாட்டி உடல்நிலை சரியில்லாமல் போனது .அதை தொடர்ந்து எனது பாட்டி மதுரைக்கு என் பெற்றோரால் அழைத்து செல்லப்பட்டார் .
இந்நிலையில் அவரது ஆசைப்படி என் சித்தப்பா வீட்டிற்கு அவரை என் அப்பா அழைத்து சென்று விட்டுரிக்கிறார் .அங்கு என் பாட்டி மிகவும் உடல்நலம் குன்றி காணப்ட்டதல் சித்தப்பா அவரை அருகே இருந்த அவரது அத்தை வீட்டில் விட்டு இருக்கிறார் .
இந்நிலையில் தீபாவளிக்காக அங்கே இருந்த எனது தாய் வழி பாட்டி வீட்டிற்கு சென்ற நான் அங்கே அருகே இருந்த எனது சித்தப்பா வீட்டிற்கு செல்லாமல் வந்து விட்டேன்.
அதன் பிறகு ஒரு மாதம் கழித்து நான் என் பாட்டி இறந்தபோது ஊருக்கு சென்ற போது அங்கிருந்தோர் கூறிய விஷயம் என்னை வேதனைக்கு உள்ளாக்கியது.
தீபாவளி அன்று நாங்கள் யாராவது அவருக்கு உடைகள் ,பலகாரங்கள் கொண்டு வருவோம் என்று வாசலிலேயே காத்து இருந்திருக்கிறார் .
இதை இன்று நினைத்தாலும் நான் வெட்கபடுகிறேன்.நான் மனிதன் என்று கூற எனக்கு அருகதை இல்லை .

புதன், 22 அக்டோபர், 2008

ஆண் பெண் நட்பு

இன்றைய உலகில் ஆண் பெண் நட்பாக இருப்பது எவ்வளவு கடினம் என்பதை வாழ்கையில் நேரடியாக உணர்ந்தவன் நான்.நான் கல்லூரியில் முதலாமாண்டு பயிலும் மாணவன் .என்னுடன் 12 சகோதரிகள் பயில்கின்றனர் .அட,வேற ஒண்ணுமில்ல ,என்கூட படிக்கிற பிள்ளைகளைதான் சொல்றேன் .
எனக்கு கூட பிறந்தவங்க யாரும் இல்ல அதனாலே தான் இப்படி சொல்றேன் .
நான் இப்படி நினைச்சாலும் என் நண்பர்கள் சிலர் என்னை புரிந்து கொள்ள மறுக்கின்றனர் .எனது நண்பன் ஒருவனும் என்னை போலவே ஒரு நல்ல நண்பனாக பெண்களிடத்திலும் ஆண்களிடத்திலும் பழகுகிறான் .
எங்களை புரிந்து கொள்ளாமல் நெருங்கிய நண்பன் ஒருவன் எங்களை கடலை பார்ட்டிகள் என்று கூறுகிறான் .
இப்படி சொல்லாதே ,என்று நாங்கள் மறுத்து கூறியதற்கு எங்களை புரிந்து கொள்ளாமல் இனி எங்களிடம் பேசமாட்டேன் என்று கூறிவிட்டான் .
இதில் என்ன ஒரு வேடிக்கை எனில் அவன் எனது மற்றொரு நண்பனிடம் ஆறு வருடங்களாக பலகிவருபவனாம் .அவன் என்னிடம் வேதனை பொங்க கூறியது
" ஆறு வருடங்களாக பழகியும் என்னை புரிந்து கொள்ளாமல் இப்படி பேசுகிறானே, ஆனால் முன்று மாதங்கள் பழகிய நீங்கள் புரிந்து கொள்வதை கூட அவன் புரிந்து கொள்ள மறுக்கிறானே "என்று அவன் பெண்களிடமும் என்னிடமும் கூறியபோது நான் நொந்துவிட்டேன் .
இந்த பிரச்னை இப்படி என்றால் என் நண்பன் ஒருவன் பயிலும் பொறியியல் கல்லூரி ஒன்றின் கொடுமை இன்னும் மோசம் .ஒரு ஆணும் பெண்ணும் பேசினால் இருவருக்கும் தலா 500 ரூபாய் அபராதமாம் .
இது போன்ற நிகழ்வுகள் உண்மையில் எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்தும் .நாளைய சமுகத்தில் இப்படிப்பட்ட முறையில் வளர்ந்த இளைஞர்கள் எப்படி அலுவலகம் போன்ற இடத்தில் மற்றவர்களோடு தொடர்பு கொள்ள இயலும் .
காதல் ,நட்பு என்பவற்றுக்கு இடையேயான வேறுபாட்டை இன்னும் சில ஜந்துகள் புரிந்து கொள்ளாமல் ,நட்பாக பழகும் பெண்ணிடம் காதல் கடிதம் நீட்டி தங்கள் நட்பை கொச்சை படுத்தி ,அந்த பெண்ணின் மனதையும் வடுவாக்குகின்றனர்.
இப்படி பட்ட ஒருசில ஆண்களால் பெண்ணிடத்தில் ஒரு ஆண் பேசினாலே அதற்கு கண் காது மூக்கு வைத்து இந்த சமுகம் கதை எழுதிவிடுகிறது .
பெண்ணை ஒரு போக பொருளாக பார்க்கும் இந்த ஆணாதிக்க சமுகத்தின் பார்வை என்று மாறுமோ!
ஒரு பெண் தன்னிடம் செல்போனில் பேசினாலே ,அவளை தன் ஆள் என்பது எவ்வளவு பெரிய கேவலம் .நான் உண்மையாக காதலிப்போர் யாரையும் குறை சொல்லவில்லை .கல்லூரிக்கு வருவதே காதலிக்கதான் என்று ஊடகங்களில் வருவதை நம்பும் சில ஜென்மங்களை நம்மால் ஒன்றும் செய்ய இயலாதது நமது துர்பாக்கியமே .
இதிலும் ஒரு சில காதல் மன்னன்கள் மிக பிரபலம் .நான் ஆறு பேரை காதலிக்கிறேன் .நான் உன்னை விட பெரிய ஆள் ,பத்து பேரை காதலிக்கிறேன் .
இப்படி பேசி கொள்வதில்தான் இவர்களுக்கு எவ்வளவு இன்பம் .
எனக்கு தெரிந்தவரை தமிழகத்தில்தான் ஊர்சுற்றும் போக்கிரிகளையும் ,உதவாக்கரைகளையும் ,வெட்டி ஆப்பிசர்களையும் பெண்கள் விரும்புவதாக அறிகிறேன் .இங்கு அமைதியை விரும்புபவரை யாரும் விரும்புவதில்லை .
நட்பு ,காதல் என்பனவற்றைவிட நமது பெற்றோர்தான் முக்கியம் என்றுர்ந்தோர் மிக குறைவு .நமது பெற்றோரின் ஆசை ,கனவு போன்றவற்றை
நிறைவேற்றுவதில்தான் அவர்களது மகிழ்ச்சி ஒளிந்துள்ளது.

புதன், 15 அக்டோபர், 2008

ரசிகனும் ரஜினியும்

உலகிலேயே நம் தமிழகம் ஒரு இடத்தில்தான் யார் நினைத்தாலும் முதல்வர் ஆக இயலும் .அரசியலே வேண்டாம் நான் நல்லவனாக வாழ விரும்புகிறேன் என்கிறார் ரஜினி .அப்படிப்பட்ட ஒரு தூய மனிதனை நாறடிக்கும் முயற்சியாக அவரையும் அரசியல் சாக்கடையில் தள்ள நம் மக்கள் படும் பாடு ,சிரிப்பை வரவழைக்கிறது.
அரசியல் ஒரு சாக்கடை என்றால் அதை சுத்தப்படுத்த வேண்டியதுதானே என்று கூறுவோர் ,முதலில் ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் .ரஜினி நினைத்தால் எதுவும் நிகழும் தமிழகத்தில் .ஆனால் அவரோ மற்றவர்களை போல் பதவிக்காக அலை பவர் அல்ல .ஏழைகளின் கண்ணீரை கண்டு தானும் அழுபவர் .
அவர் நினைத்தால் கட்சி தொடங்கும் முன்றே நாட்களில் தமிழகத்தில் முதல்வராகிவிடுவார்.பதவி வெறி பிடித்து அலையும் மற்றவர்களை போல் அல்லர் அவர்.அவர் விரும்பினால் பதவி தானாக அவரிடம் தேடி வரும் .அவருக்கு பதவியைவிட ஆன்மிகம் அதிகம் பிடித்து போனது.அவர் தெய்வ வழிபாட்டில் மனநிறைவு காணுபவர்.
அவரது ரசிகர்கள் இதை உணராமல் அவரை பதவியில் அமரவைக்க முயல்வது வருந்தத்தக்கது.கோவையில் கட்சி தொடங்கிய அவரது ரசிகர்கள் கூறும் கருத்தை கேட்கையில் சிரிப்பாக வருகிறது .ரசிகர் மன்றத்தின் மூலம் அரசியலில் நுழையலாம் என்ற அவர்களது கனவு நிறைவேறாமல் போகுமோ எனும் பயத்தில்தான் கட்சி தொடங்கினராம்.என்ன இவர்களது கற்பனை திறன்.அப்படிஎன்றால் இவர்களின் கருத்துப்படி ரசிகர்மன்றம் வைத்துள்ள அனைத்து நடிகர்களும் கட்சி தொடங்கவேண்டும் .சரி அப்ப நம்ம வீரத்தளபதி ஜே.கே .ரித்தீஷ் விரைவில் கட்சி தொடங்கி தமிழக முதல்வராக போகிறார் .எல்லாரும் ஜோரா ஒரு தடவ கை தட்டுங்க .
மக்கள் பிரச்சனைகளை தீர்க்க யாரும் கட்சி தொடங்கவில்லை .சம்பாதிப்பதர்க்காகத்தான் கட்சி தொடங்கியுள்ளனரா ?
அப்படிஎன்றால் நிச்சயம் இது ஒரு சுயநலவாதமே.சுயநலத்துடன் இருக்கும் இவர்களை கண்டு பயந்துதான் ரஜினி அரசியலுக்கு வர பயப்படுகிறார் என்று நான் கருதுகிறேன் .
சுயநலம் கொண்ட இவர்களை வைத்து கட்சி தொடங்கினால் ரஜினியின் பேர் ரிப்பேர் ஆகிவிடும்.ரஜினி எனும் நல்லவரை முடிந்தவரை வாழ விடுங்கள் .அதை விட்டுவிட்டு அவரை சாமானியன் ஆக்கிவிடதிர்கள்.அவரது பலமே மக்கள் அவர் மீது கொண்டுள்ள நம்பிக்கை தான்.கண்டக்டர் ஆக தான் வாழ்வை தொடங்கி நடிகராக இருக்கும் அவர் முதல்வர் ஆவது குறித்து அவரது சொந்த முடிவுக்கு விட்டு விடுங்கள் .
ஆஹா !இந்த வாரத்தின் சிறந்த காமெடி .

செவ்வாய், 14 அக்டோபர், 2008

அணு சக்தி ஒப்பந்தத்தின் ் விபரிதம்

செர்நோபில் அணு உலையில் நிகழ்ந்த அணு கதிர் விச்சால் ஐரோப்பிய கண்டம்வரை ஏற்பட்ட பாதிப்பு உலகறிந்தது . அப்படிப்பட்ட ரசிய நாட்டின் அணுஉலையின் பழைய பாகங்களையே நமது கூடங்குளம் அணு உலையில்பயன்படுத்தி வருகிறார்கள் எனும் செய்தி வேதனைக்குரியது .
தற்போது அமெரிக்காவுடன் ஏற்பட்டுள்ள அணு ஒப்பந்தத்தை ஆதரிப்பவர்கள் .
பின்னால் நிச்சயம் வருந்துவார்கள் .நம்முடைய மின்சார தேவையைமுடிந்தவரை இயற்கை வழியில் பெற முயலவேண்டும் .அதை விடுத்துவேண்டாத விபரிதத்தை விலைக்கு வாங்குவானேன் .மேலும் அமெரிக்காவின்இரட்டை வேசத்தை உலகு நன்கு அறியும் .உலக அண்ணனின் சேட்டைகள்தான் உலகறிந்த ஒன்றாகுமே ! அப்படிப்பட்ட கயவர்களை நம்பியா நாம் அணு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது .
ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு முன்பாக பாராளுமன்றத்தின் இருஅவைகளிலும் விவாதம் மற்றும் வாக்கெடுப்பு நடத்தப்படும் என்றமாண்புமிகு மன்மோகன் சிங் அவர்கள் அவசரமாய் ஒப்பந்தத்தை நிறைவேற்றகாரணம் யாது ?
வேறு ஒரு மண்ணும் இல்லை அவனிடம் நம் நாட்டை அடிமை சாசனம் எழுதிகொடுப்பதுதான் இந்த ஒப்பந்தம் .தற்போது பன்னாட்டு நிறுவனங்கள் எனும்
கொள்ளைகரர்களால் நமது உழைப்பு திருடப்படுவது போல் நமது நாட்டில்இனி அணு உலை உற்பத்தி பொருட்கள் கண்டரியாபடின் நாம் அவன் கேட்கும்விலைக்கு விற்கவேண்டிய நிலை ஏற்படும்.
தன் நாட்டு மக்களின் துயர் துடைக்க வக்கில்லாத இவர்கள் நமது துயரதையாதுடைப்பார்கள் .அவர்கள் நாட்டு மக்களை கடன்காரர்கள் ஆக்கும் இவர்கள்நம்மை பிட்சை எடுக்க வைத்து விடுவார்கள் .
கிழக்கிந்திய கம்பெனி எனும் ஒரு பன்னாட்டு நிறுவனமே பின்பு நமது முழுஇந்தியாவையிம் கைபற்றியது .அன்றாவது நம்மை காக்க போராடும்மனமுடைய ஒரு சில வீரர்களாவது இருந்தனர் .இன்று நம்மை சுரண்டோசுரண்டு என சுரண்டும் தலைவர்கள் சத்யமாய் நமக்கு குழி வெட்டி கருமாதிசெய்துவிட்டு அதற்க்கு வேண்டிய குலியை mnc களிடம் வாங்கி கொள்வார்கள்
நாம் கசாப்புகடைக்கு செல்லும் அட்டைப்போல் தலையைதொங்கபோட்டபடி அடிமையாய் பின் தொடர வேண்டியதுதான் .
இன்று உலக அளவிலான பொருளாதார பிரச்சனைகளுக்கு காரணமான அமெரிக்கா விரைவில் நம்மையிம் அவர்களது கட்டுப்பாட்டிற்குட்பட்ட ஒரு நாடாக ஆக்க முயல்கின்றனர் .தற்போதே அவர்களது அடிமை பாக்கிஸ்தானின் பொருளாதாரம் டமால் ஆகிவிட்டது .
அடுத்த அடிமையாக நமது மன்மோகன் சிங் அவர்கள் சிக்கிவிட்டார்கள்.

ஞாயிறு, 12 அக்டோபர், 2008

கவிதைகள் முழங்கிடும் நேரம்

நான் படைத்த சில சிறு கவிதைகள் ,பதிவர்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கிறேன் .
தங்களின் விமர்சனங்களை எதிர் நோக்கி காத்திருக்கும் ஏகலைவன் நான்.
வானவில்
வானத்தில் தோன்றும் ஏழு வண்ண வளைவு
மழை நின்ற வானில் சூரியனின் வண்ண ஓவியம்
அர்ஜுனன் வில்லா ஏகலைவன் வில்லா
பாரினில் நல்லாசிரியர் என பார் போற்றினாலும்
பொதுவான கல்வியை தீண்டாமையால்
மறுத்த துரோணரின் வில்லா என என்னுள் எழும்
கேள்விகள் ஆயிரம் ஆயினும்
இனி வரும் காலம் வரலாறை மாற்றும்.

தேடல்
வாழ்க்கை ஒரு போர்களம்
அதில் சாகும் வரை போராடு
வாழ்க்கை ஒரு பயணம்
அதன் சுவாரசியத்தை உணர்
வாழ்க்கை ஒரு சொர்க்கம்
நீ அதை பார்க்கும் பார்வையில்
வாழ்க்கை ஒரு தேடல்
அதில் உன் நண்பனை தேடு
உன் நண்பர்களிடத்தில் நீ எதிர்பார்ப்பதை
நீ அவர்களுக்கு வழங்கு
என்றும் மகிழ்வுடன் வாழ பழகு

தாயன்பு
ஆண்டவன் வழங்கிய அரிய
பொக்கிஷம்
தாய் தன் மகனுக்கு

எதிலோ படித்தது
நேற்று என்பது உடைத்த பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது உன் கையில் உள்ள வீணை

தோழன்
தோல்விகள் தான் உன் பலவீனங்களை
உனக்கு சுட்டி காட்டும் தோழன்
வெற்றி உன் பலத்தை காட்டி
உன்னை மண்ணாக்கும் எதிரி
தோல்விகள் நம்மை பலபடுத்தும்
வெற்றிகள் பிறரை காயபடுத்தும்
வெற்றி நமக்கு தேவை
தோல்விகள் தரும் அந்த போதை
முயல்பவன் முத்திரை பதிப்பான்
முயலாதவன் காரணங்கள் தேடுவான்.

சனி, 11 அக்டோபர், 2008

தமிழக அரசியல் ஒரு சிறப்பு பார்வை

இந்தியா சுதந்தரம் அடைந்த பிறகு ,நம் நாட்டில் அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது.தமிழ் நாட்டில் பெரியாரின் பகுத்தறிவு பாசறையில் வளர்ந்த அறிஞர் அண்ணாவின் கழகத்தாலும் படிக்காத மேதை காமராசரை வெளியேற்றிய காரணத்தாலும் காங்கிரஸ் தமிழக அரசியலில் தனக்குரிய இடத்தை இழந்தது.அண்ணாவின் ஒரு ரூபாய்க்கு ஒரு படி அரிசி திட்டம் தேர்தலில் தி.மு.கவை மாபெரும் வெற்றி அடைய செய்தது .
மறுபடியும் மிசா காலத்தில் காங்கிரஸ் தேவையில்லாமல் தனது செல்வாக்கை குறைத்து கொண்டது .எம் .ஜி.ஆர் பிறகு தி.மு.கவிலிருந்து பிரிந்து அதிமுகவை தொடங்கி தேர்தலி வெற்றி பெற்றார்.பிறகு அரசியல் சாணக்கியர் கலைஞர் இந்திரா காந்தியுடன் கூட்டணி அமைத்து தமிழக தேர்தல் வரலாற்றிலேயே அதிக இடங்களை கைபற்றியது .பிறகு எம்.ஜி.ஆர் காங்கிரஸ் கூட்டணி ஏற்பட்டு காங்கிரஸ் தலையெடுக்க முடியாத நிலை ஏற்பட்டது .பின்னாளில் இந்தியாவிலேயே தமிழகம் ஒரு மாநிலத்தில்தான் முதல்வர் ஆவதற்கு திரை பட தொடர்பு இருக்க வேண்டும் என்ற பரிதாபகரமான நிலை தோன்றியுள்ளது. விதி விலக்காய் சில கட்சிகள்(பா.ம.க,கம்யுனிஸ்டுகள் போன்றோர்) தற்போதும் கட்சி நடத்தி வருகின்றன.

இதில் நேற்று கட்சி தொடங்கிய சரத்குமார் ,விஜயகாந்த்,கார்த்திக்,ராமதாஸ் என பலரும் சற்றும் சிரிக்காமல் அடுத்த தேர்தலில் நந்தன் தமிழக முதல்வர் என்று நா கூசாமல் பேசுகின்றனர் .ரஜினி பாபா திரைப்படத்தில் கூறுவது போல் ,முதல்வர் பதவி தமிழகத்தில் சாதரணமானது அல்ல .அதற்கு கலைஞர்,ஜெயலலிதா போன்றோர் பட்ட அவமானங்கள் தமிழ் மக்கள் நன்கு அறிவிர்கள் .
அடுத்த தேர்தலிலாவது மக்கள் சிந்தித்து ஓட்டளித்து நமது தமிழகத்தை கக்கமுயலவேண்டும்.(அது mudiyathu)
ஒரு சின்ன காமெடி
டி ஆர் சாரை மறந்துட்டேன் என்னைய மன்னிச்சிடுங்க ப்ளீஸ்