புதன், 22 அக்டோபர், 2008

ஆண் பெண் நட்பு

இன்றைய உலகில் ஆண் பெண் நட்பாக இருப்பது எவ்வளவு கடினம் என்பதை வாழ்கையில் நேரடியாக உணர்ந்தவன் நான்.நான் கல்லூரியில் முதலாமாண்டு பயிலும் மாணவன் .என்னுடன் 12 சகோதரிகள் பயில்கின்றனர் .அட,வேற ஒண்ணுமில்ல ,என்கூட படிக்கிற பிள்ளைகளைதான் சொல்றேன் .
எனக்கு கூட பிறந்தவங்க யாரும் இல்ல அதனாலே தான் இப்படி சொல்றேன் .
நான் இப்படி நினைச்சாலும் என் நண்பர்கள் சிலர் என்னை புரிந்து கொள்ள மறுக்கின்றனர் .எனது நண்பன் ஒருவனும் என்னை போலவே ஒரு நல்ல நண்பனாக பெண்களிடத்திலும் ஆண்களிடத்திலும் பழகுகிறான் .
எங்களை புரிந்து கொள்ளாமல் நெருங்கிய நண்பன் ஒருவன் எங்களை கடலை பார்ட்டிகள் என்று கூறுகிறான் .
இப்படி சொல்லாதே ,என்று நாங்கள் மறுத்து கூறியதற்கு எங்களை புரிந்து கொள்ளாமல் இனி எங்களிடம் பேசமாட்டேன் என்று கூறிவிட்டான் .
இதில் என்ன ஒரு வேடிக்கை எனில் அவன் எனது மற்றொரு நண்பனிடம் ஆறு வருடங்களாக பலகிவருபவனாம் .அவன் என்னிடம் வேதனை பொங்க கூறியது
" ஆறு வருடங்களாக பழகியும் என்னை புரிந்து கொள்ளாமல் இப்படி பேசுகிறானே, ஆனால் முன்று மாதங்கள் பழகிய நீங்கள் புரிந்து கொள்வதை கூட அவன் புரிந்து கொள்ள மறுக்கிறானே "என்று அவன் பெண்களிடமும் என்னிடமும் கூறியபோது நான் நொந்துவிட்டேன் .
இந்த பிரச்னை இப்படி என்றால் என் நண்பன் ஒருவன் பயிலும் பொறியியல் கல்லூரி ஒன்றின் கொடுமை இன்னும் மோசம் .ஒரு ஆணும் பெண்ணும் பேசினால் இருவருக்கும் தலா 500 ரூபாய் அபராதமாம் .
இது போன்ற நிகழ்வுகள் உண்மையில் எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்தும் .நாளைய சமுகத்தில் இப்படிப்பட்ட முறையில் வளர்ந்த இளைஞர்கள் எப்படி அலுவலகம் போன்ற இடத்தில் மற்றவர்களோடு தொடர்பு கொள்ள இயலும் .
காதல் ,நட்பு என்பவற்றுக்கு இடையேயான வேறுபாட்டை இன்னும் சில ஜந்துகள் புரிந்து கொள்ளாமல் ,நட்பாக பழகும் பெண்ணிடம் காதல் கடிதம் நீட்டி தங்கள் நட்பை கொச்சை படுத்தி ,அந்த பெண்ணின் மனதையும் வடுவாக்குகின்றனர்.
இப்படி பட்ட ஒருசில ஆண்களால் பெண்ணிடத்தில் ஒரு ஆண் பேசினாலே அதற்கு கண் காது மூக்கு வைத்து இந்த சமுகம் கதை எழுதிவிடுகிறது .
பெண்ணை ஒரு போக பொருளாக பார்க்கும் இந்த ஆணாதிக்க சமுகத்தின் பார்வை என்று மாறுமோ!
ஒரு பெண் தன்னிடம் செல்போனில் பேசினாலே ,அவளை தன் ஆள் என்பது எவ்வளவு பெரிய கேவலம் .நான் உண்மையாக காதலிப்போர் யாரையும் குறை சொல்லவில்லை .கல்லூரிக்கு வருவதே காதலிக்கதான் என்று ஊடகங்களில் வருவதை நம்பும் சில ஜென்மங்களை நம்மால் ஒன்றும் செய்ய இயலாதது நமது துர்பாக்கியமே .
இதிலும் ஒரு சில காதல் மன்னன்கள் மிக பிரபலம் .நான் ஆறு பேரை காதலிக்கிறேன் .நான் உன்னை விட பெரிய ஆள் ,பத்து பேரை காதலிக்கிறேன் .
இப்படி பேசி கொள்வதில்தான் இவர்களுக்கு எவ்வளவு இன்பம் .
எனக்கு தெரிந்தவரை தமிழகத்தில்தான் ஊர்சுற்றும் போக்கிரிகளையும் ,உதவாக்கரைகளையும் ,வெட்டி ஆப்பிசர்களையும் பெண்கள் விரும்புவதாக அறிகிறேன் .இங்கு அமைதியை விரும்புபவரை யாரும் விரும்புவதில்லை .
நட்பு ,காதல் என்பனவற்றைவிட நமது பெற்றோர்தான் முக்கியம் என்றுர்ந்தோர் மிக குறைவு .நமது பெற்றோரின் ஆசை ,கனவு போன்றவற்றை
நிறைவேற்றுவதில்தான் அவர்களது மகிழ்ச்சி ஒளிந்துள்ளது.

1 கருத்து: