வெள்ளி, 24 அக்டோபர், 2008

தீபாவளியும் எனது பாவமும்

எனது மனசாட்சியின் கேள்விகளுக்கு பதில் கொடுக்கும் பொருட்டு இந்த சம்பவத்தை உங்களிடம் கூறி ஆறுதல் தேட விழைகிறேன் .
என் தந்தை 3 வயது குழந்தையாக இருந்த போதே அவரது அப்பா இறந்து விட்டாராம் .அதன் பிறகு எனது அப்பா ,சித்தப்பா ,அத்தை ஆகியோரை எனது
பாட்டியும் அவரது தாயும் இணைந்து மிகுந்த சிரமத்திர்க்கிடேயே வளர்த்தர்கலாம்.
என் அப்பா மிகுந்த போக்கிரிதனதுடன் ,கிராமத்து வாலிபர்களுக்கேயுரிய குறும்புடன் சேட்டைகள் செய்வாராம்.
இப்படி ஒரு முறை என் சித்தப்பாவால் என் அப்பா ஒருவரை அடித்து ரத்த காயம் ஆகிவிட்டதாம் .இதனால் என் அப்பாவை திருத்தும் பொருட்டு அவர்கள் பிறந்த ஊரான தஞ்சையிலிரிந்து மதுரைக்கு அழைத்து வந்தார்களாம் .
இங்கு வந்த பிறகு அச்சக தொழிலை தன் மாமாவின் மூலமாக என் அப்பா கற்று கொண்டார் .பிறகு மாமா தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் வேறு ஊருக்கு சென்று விட்டார் .பிறகு என் பாட்டி எங்கள் வீட்டில் சிறிது காலம் இருந்தார் .
எங்கள் வறுமையை நீக்கும் பொருட்டும் எனது கல்வி செலவுகளை சமாளிக்கும் பொருட்டும் வயது முதிர்ந்த நிலையிலும் வீட்டு வேலைக்கு சென்றார் .
பிறகு நான் எங்கள் குடும்ப வறுமை காரணமாக ,என் படிப்பை பாதியில் விட நேர்ந்தது .பிறகு என் அத்தை என்னை படிக்க வைப்பதாக கூறி கோவைக்கு அழைத்தார்கள் .இதற்கு காரணம் எனது பாட்டிதான்.
அவர் என்னை படிக்க வைக்கும் பொருட்டு எனது அத்தை அவர்களிடம் எடுத்து கூறி அவர்களை சம்மதிக்க வைத்திருக்கிறார் .இதை தொடர்ந்து நான் மறுபடியும்
பள்ளி செல்ல தொடங்கினேன் .
இவ்வாறு நான் கோவையில் இருந்த காலத்தில் எனது பாட்டி உடல்நிலை சரியில்லாமல் போனது .அதை தொடர்ந்து எனது பாட்டி மதுரைக்கு என் பெற்றோரால் அழைத்து செல்லப்பட்டார் .
இந்நிலையில் அவரது ஆசைப்படி என் சித்தப்பா வீட்டிற்கு அவரை என் அப்பா அழைத்து சென்று விட்டுரிக்கிறார் .அங்கு என் பாட்டி மிகவும் உடல்நலம் குன்றி காணப்ட்டதல் சித்தப்பா அவரை அருகே இருந்த அவரது அத்தை வீட்டில் விட்டு இருக்கிறார் .
இந்நிலையில் தீபாவளிக்காக அங்கே இருந்த எனது தாய் வழி பாட்டி வீட்டிற்கு சென்ற நான் அங்கே அருகே இருந்த எனது சித்தப்பா வீட்டிற்கு செல்லாமல் வந்து விட்டேன்.
அதன் பிறகு ஒரு மாதம் கழித்து நான் என் பாட்டி இறந்தபோது ஊருக்கு சென்ற போது அங்கிருந்தோர் கூறிய விஷயம் என்னை வேதனைக்கு உள்ளாக்கியது.
தீபாவளி அன்று நாங்கள் யாராவது அவருக்கு உடைகள் ,பலகாரங்கள் கொண்டு வருவோம் என்று வாசலிலேயே காத்து இருந்திருக்கிறார் .
இதை இன்று நினைத்தாலும் நான் வெட்கபடுகிறேன்.நான் மனிதன் என்று கூற எனக்கு அருகதை இல்லை .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக