Lyrics: Vairamuthu
Singer: Swarnalatha
எவனோ ஒருவன் வாசிக்கிறான் ...இருட்டிலிருந்து நான் யாசிக்கிறேன்
தவம் போல் இருந்து யோசிக்கிறேன் அதைத் தவணை முறையில் நேசிக்கிறேன்
எவனோ ஒருவன் வாசிக்கிறான் இருட்டிலிருந்து நான் யாசிக்கிறேன் (2)
தவம் போல் இருந்து யோசிக்கிறேன் அதைத் தவணை முறையில் நேசிக்கிறேன்
கேட்டு கேட்டு நான் கிறங்குகிறேன் கேட்பதை எவனோ அறியவில்லை
காட்டு மூங்கிலின் காதுக்குள்ளே அவன் ஊதும் ரகசியம் புரியவில்லை
எவனோ ஒருவன் வாசிக்கிறான் இருட்டிலிருந்து நான் யாசிக்கிறேன்
புல்லாங்குழலே பூங்குழலே நீயும் நானும் ஒரு ஜாதி (2)
உள்ளே உறங்கும் ஏக்கத்திலே உனக்கும் எனக்கும் சரி பாதி
கண்களை வருடும் தேனிசையில் என் காலம் கவலை மறந்திருப்பேன்
இன்னிசை மட்டும் இல்லையென்றால் நான் என்றோ என்றோ இறந்திருப்பேன்
எவனோ ஒருவன் வாசிக்கிறான் இருட்டிலிருந்து நான் யாசிக்கிறேன்
உறக்கம் இல்லா முன்னிரவில் என் உள் மனதில் ஒரு மாறுதலா (2)
இறக்கம் இல்லா இரவுகளில் இது எவனோ அனுப்பும் மாறுதலா
எந்தன் சோகம் தீர்வதற்கு இது போல் மருந்து பிரிதில்லையே
அந்தக் குழலைப் போல் அழுவதற்கு அத்தனை கண்கள் எனக்கில்லையே
எவனோ ஒருவன் வாசிக்கிறான் இருட்டிலிருந்து நான் யாசிக்கிறேன் (2)
ஞாயிறு, 24 ஏப்ரல், 2011
எவனோ ஒருவன் வாசிக்கிறான் - அலை பாயுதே
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
vairamuthu rocks melody song
பதிலளிநீக்குvairamuthu rocks melody song
பதிலளிநீக்கு