வெள்ளி, 6 மே, 2011

ஆராரோ ஆரிராரோ - சிறுத்தை

உலகில் உள்ள சொந்தங்களில் நம் உறக்கத்திற்காக தன்னுறக்கம் கலைத்து தாலாட்டு பாடும் அன்னையை விட உயரிய உறவு வேறு ஏது. அந்த அன்னை நமக்காக  பாடிய தாலாட்டை நம்மால் மறக்க முடியுமா? சிறுத்தை படத்தில் வந்த சிறு தாலாட்டுப் பாடல் அன்னையின் நினைவை நம்முள் விதைக்க, அவ்ளை என்றும் மறவாதிருக்க.

ஆராரோ ஆரிராரோ அம்புலிக்கு நேர் இவரோ..
தாயான தாய் இவரோ தங்க ரத தேர் இவரோ ..
மூச்சுப்பட்டா நோகுமுன்னு மூச்சடக்கி முத்தமிட்டேன்
நிழலுபட்டா நோகுமுன்னு நிலவடங்க முத்தமிட்டேன்
தூங்காமணி விளக்கே தூங்காம தூங்கு கண்ணே ..
ஆச அகல் விளக்கே அசையாமல் தூங்கு கண்ணே ..
ஆராரோ ஆரிரரோ .. ஆரிரோ ஆரிரரோ ..
ஆராரோ ஆரிரரோ .. ஆரிரோ ஆரிரரோ ..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக