திங்கள், 24 நவம்பர், 2008

காட்டடி சேவாக்கும் கம்பீர காம்பீரும்

 இந்திய அணியின் இரட்டை குழல் துப்பாக்கிகளாக துவக்கத்தில் அதிர்வேட்டு போடும் டெல்லி டேர் டெவில்ஸ் அணியின் நட்சத்திரங்களான சேவாக் மற்றும் காம்பீர் இணை என் உள்ளம் கவர் கொள்ளையர்கள் ஆவர்..
டெண்டுல்கர் ,கங்குலி இணைக்கு பிறகு இந்த இணையின் ஆட்டம் படு ஜோர் .எப்பொழுதும் பந்தை உடைக்க வேண்டும் என்ற வெறியோடு அடிக்கும் சேவாக்கும் டெக்னிக்கலாக விளையாடும் காம்பிரும் அருமையான ஒரு துவக்கத்தை இந்திய அணிக்கு வழங்குகிறார்கள் .
 
20 - 20 உலக கோப்பை வெற்றிக்கு மிக முக்கிய காரணம் இந்த இணை நமக்கு அளித்த அபாரமான அதிரடி துவக்கமே எனில் அது மிகை ஆகாது.நியுசிலாந்துக்கு எதிரான ஒரு ஆட்டத்தில் இந்தியா தோற்றது .எனினும் அந்த போட்டியில் இந்த இணையின் போராட்டம் குறிப்பிடத்தக்கது .
இந்த இணையில் இருவரும் பந்துக்கு பந்து ரன் குவிப்பதை மட்டுமே கணக்கில் கொண்டு அதிரடியாக ஆடுகின்றனர்.இந்த இணையின் அதிரடி சரவேட்டால் சென்ற ஐ.பி.எல்.தொடரை டெல்லி அணிதான் கைப்பற்றும் என பலர் கூறியது குறிப்பிடத்தக்கது.இருந்தாலும் அற்புதமான வீரரான வார்னேவின் ராஜஸ்தான் ராயல்ஸ் இதை வென்றது ஏற்று கொள்ள கூடியதே .

  இயல்பாகவே இடக்கை மற்றும் வலக்கை இணையை பிரிப்பது மிக கடினம்,அதிலும் இந்த இணை ஒரு படி மேலே போய் எந்த ஒரு கடின பந்து வீச்சையும் ஒரு கை பார்க்கின்றனர் .தேர்வாளர்களால் உள்ளே வெளியே என பந்தாடப்பட்ட காம்பிர் தற்சமயம் தனது பேட்டிங் அணுகு முறையை மாற்றி வெற்றி கண்டிருக்கிறார் .அவர் முன்பு அணிக்கு வந்த போது தற்போது விளையாடுவதற்கு முற்றிலும் மாறாக அனைத்து பந்துகளிலும் அதிரடியாக விளையாட முற்பட்டு தனது விக்கெட்டை இழந்துவிடுவார்.

இவர்களது இணை சராசரி மற்ற துவக்க சாதனை சராசரிகளை விட மிக அதிகம் .இவர்களது வயது மிக குறைவு எனவே இந்த சாதனைகளின் அளவு கூடும் என்பதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை .இவர்களுக்கு இடையிலான புரிதல் மற்ற எந்த இணைகளுக்கும் நடுவே இல்லை என்பது நிச்சயம்.

உலகின் புகழ் பெற்ற மற்றொரு இணையான ஆடம் கில்க்ரிஸ்ட்,ஹெய்டன் இணையின் ஆட்டம் இவர்களுக்கு இணையான ஆட்டம் இல்லை என்பது என் கருத்து.காரணம் என்னவெனில் அவர்கள் பயிற்சியின் போது உலகின் முதல் நிலை பந்து வீச்சாளர்களின் பந்துக்களை எதிர்கொண்டிப்பர் .அதன் காரணமாகவே நான் இந்திய தொடக்க வீரர்களான சச்சின் ,கங்குலி மற்றும் சேவாக் ,காம்பிர் இணைகள் சிறந்தவை என்கிறேன்.

சேவாக் முன்னாள் தமிழக வீரர் ஸ்ரீ காந்தை போல் அதிரடியாக விளையாடுகிறார் என என் நண்பர் ஒருவர் கூறினார் ,இதில் மாற்று கருத்துக்கே இடமில்லை . ரவி சாஸ்திரி பந்துகளை வீணடிக்கும் நேரத்தில் ஒரு முனையில் பந்துகளை துவைத்து எடுக்கும் ஸ்ரீகாந்த் தான் சச்சின்,சேவாக் இருவருக்கும் முன்னோடி என்பது என் கருத்து.

இந்திய இணைகளில் மிக சிறந்தது கங்குலி, சச்சின் இணை என்பதில் எவ்வித அய்யமும் இல்லை .அதற்கடுத்த மிக சிறந்த இணை இவர்களே.  கங்குலியின் ரசிகரான காம்பீரும் ,சச்சினின் சீடரான சேவாக்கும் இந்திய அணிக்கு அடுத்த உலக கோப்பையை கைபற்றி தர போகும் வெற்றி நாயகன் டோனிக்கு போர் படை தளபதிகளாக விளங்குவர் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை .  

இருவரும் இப்படி இருந்தாலும் சச்சினின் டெக்னிகலான ஆட்டம் காம்பீரிடம்தான் வெளிப்படுகிறது,இதற்கு மாறாக சேவாக்கிடம் கங்குலியின் அதிரடி தன்மை காணப்படுகிறது .இவர்கள் ஜோடி சேர்ந்த குறுகிய காலத்துக்குள் பல முறை நூறு ரன்களுக்கு மேல் இணை ரன் குவிப்பாக குவித்துள்ளனர்.

இவர்களிடம் சிக்கிக்கொண்டு எதிரணி பந்து வீச்சாளர்கள் படும் பாடு பார்க்க பரிதாபமாய் இருக்கிறது.நேற்றைய போட்டியில் ஆண்டர்சனின் பந்துகளை ஏதோ அறிமுக பந்து வீச்சாளரின் பந்தை போல் பிரித்து மேய்ந்தனர்.இவர்களுக்கு இடையே காணப்படும் புரிதல் தான் இவர்கள் வெற்றிக்கு காரணம் என்பது என் கருத்து.

அதிரடி துவக்கம் தர இவர்கள் ,பிறகு நடு வரிசையில் வானவேடிக்கை காட்ட யுவராஜ் ,விக்கெட் வீழ்ச்சியை கட்டுப்படுத்த ரெய்னா ,அணிக்கு தேவையான ஆட்டத்தை வழங்க காப்டன் தோனி ,திறமைசாலி ரோஹித் சர்மா ,அணிக்கு கூடிய விரைவில் திரும்பவுள்ள சூடு காட்டும் உத்தப்பா என இந்தியாவின் பேட்டிங் படை உள்ளது.

இந்திய மண்ணில் இந்த சிங்ககளுக்கு போட்டியாக வரும் அணி அனேகமாக இலங்கையாகத்தான் இருக்க போகிறது .மென்டிஸ் மற்றும் முத்தையாவை எதிர்கொள்வதில் தான் இந்த அணி திணறுகிறது என்பது என் கருத்து .இந்த நல்ல நிலை உலக கோப்பை வரை நீடிக்க வேண்டும் இந்திய மக்கள் அனைவரது ஆசை .

ஆஸ்திரேலியா தற்போது உள்ள நிலையில் அது மீண்டும் வலுவடைய சில ஆண்டுகளாகும் .வார்னே ,மெக்ராத் ,கில்க்ரிஸ்ட் ,கில்லேச்பி போன்ற ஜாம்பவான்களின் இடத்தை நிரப்புவது சாதரண காரியம் அல்ல .நல்ல நிலையில் அறிமுகம் ஆன ஜான்சன் ,டைட் போன்றவர்கள் தற்சமயம் சொதப்பி வருகின்றனர் .எனினும் இவர்கள் தொடரின்போது நல்ல நிலையில் இருந்தாலும் இவர்களது பந்து வீச்சு இந்திய மைதானங்களில் எடுபடுமா என்பது சந்தேகமே !

இப்படி மற்ற அணிகள் இருக்க இந்தியாவோ இங்கு பட்டையை கிளப்பி கொண்டிருக்கிறது.இங்கிலாந்திற்கு எதிரான தொடரை முற்றிலும் கைபற்றும் வண்ணம் இவர்களது ஆட்டம் பட்டையை கிளப்புகிறது .

இவர்கள் இந்த நிலையிலேயே இருக்கும் பட்சத்தில் தோனி டெவில்ஸ் கோப்பையை கைபற்றுவது உறுதி.

வரவங்க ஓட்ட போட்டு தாக்குங்கோ சாமியோ !


2 கருத்துகள்: