வியாழன், 27 நவம்பர், 2008

குண்டு வெடிப்புக்கு அஞ்சி ஓடுகிறதாம் இங்கிலாந்து .பேச்ச குறைங்கப்பா !

அய்யோ சாமி ! எனக்கு சிரிக்க தெம்பில்லை ,நம்மக்கிட்டே அடி வாங்க முடியாம பின்னங்கால் பொடனியில் அடிக்க தலை தெறிக்க நம்மள்ட்ட இருந்து தப்பிச்சு ஓட இங்கிலாந்துக்கு காரணம் கிடைச்சுடுட்சு !

குண்டு வெடிப்பு நிகழ்ந்ததால் அவர்களது உயிருக்கு பாதுகாப்பு இல்லையாம் !இது வரை இவர்கள் நாட்டில் எல்லாம் குண்டு வெடிப்பே நிகழ்ந்தது இல்லையா ?

ஆசிய நாடுகள் என்றாலே இங்கிலாந்து,ஆஸ்திரேலியா,நியுசிலாந்து போன்ற வெள்ளையர் நாடுகளுக்கு இளக்காரம் .ஏற்கனேவே இவர்களை வைத்து மினி உலக கோப்பை தொடரை நடத்தி தனது நிதி நிலையை சீராக்க நினைத்த பாகிஸ்தானுக்கு இவர்கள் வைத்த ஆப்பு நாம் அறிந்ததே!

பாகிஸ்தானில் நிலைமை மோசம்தான் எனினும் முறையான பாதுகாப்பு கோருவதை விடுத்து ,நாங்கள் விளையாடமாட்டோம் என்றால் எப்படி ?

நம்முடைய நாட்டில் விளையாடுவதை ரத்து செய்துவிட்டு இவர்கள் வெளியேறுவது நமது மானத்தை வாங்குவது போல் தானே உள்ளது .
இவர்களுக்கு பாதுகாப்பு வழங்க முடியாத அளவிற்கா நம் நாடு உள்ளது.

பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் பாதுகாப்பு விசயத்தில் எவ்வளோவோ வேறுபாடு உள்ளது .இந்தியர்கள் தம் உயிரை கொடுத்தாவது தம் விருந்தினர் உயிரை காப்பரே ஒழிய ,அவர்கள் உயிர் அழிவதை வேடிக்கை பார்க்க மாட்டர்கள்.

குண்டு வைத்த கயவர்களை கூடிய விரைவில் நமது போலிசார் கைது செய்வர்.இது போல் அவர்களது நாட்டில் நடக்குமா ,இவர்கள் நமது நாட்டினரையே தீவிரவாதிகள் என்று கூறியவர்கள் தானே!

ஸ்மித் தலைமை வகிக்காத தென்னாப்பிரிக்க அணியை தோற்கடித்துவிட்டு இங்கு வாய் பேசிக்கொண்டு வந்து வாங்கி கட்டிகொண்டார்கள்.சாம்பியன்ஸ் லீக் தொடருக்கு இவர்கள் இந்தியா வருவார்கள் ,வேறு எதற்கு பணத்தை வேற எங்க இவங்க கண்ல காட்ட போறாங்க !

இவங்க வந்துட்டு போனதுனால ஒரு வழியா யுவராஜும் ,சேவாக்கும் பார்முக்கு திரும்பிட்டாங்க !அதுவரைக்கும் நமக்கு சந்தோசம் .இவர்களோடு பயிற்சி போட்டி விளையாட நினைத்த இந்தியாவுக்கு தான் பேட்லக் .விளையாடமுடியமா போச்சு .

சச்சின் டெண்டுல்கரின் உயிருக்கு மேலா இவர்கள் உயிருக்கு ஆபத்து உள்ளது. தீவிரவாதிகள் அவரது உயிருக்கு விலை வைத்த பின்னரும் தன் நாட்டிற்காக போட்டியில் பங்கேற்க பலமுறை பாகிஸ்தான் சென்று வந்துள்ள அவரது துணிவு இந்த சின்ன பசங்களுக்கு வராது.

இந்திய வீரர்களுக்கு பல முறை இமெயில் மூலமும் தொலைபேசி வழியாகவும் வந்துள்ள மிரட்டல்களை கண்டு இந்தியர்கள் என்றும் அஞ்சியதில்லை .காரணம் நாம் இந்த மண்ணில் சுதந்திர காற்றை சுவாசிக்க பட்ட கஷ்டங்களை விடவா இந்த மிரட்டல்கள் பெரிது என்ற நம் துணிவுதான்.

இப்படிப்பட்ட துணிவை இங்கு நம்மிடம் தோற்றோடும் இந்த பரங்கியரிடம் எதிர்பாக்க முடியுமா .நம்மிடம் தோற்பதை ஏற்க இயலாமல் நம் மீது பழி போடுதல் ,களத்தில் கண்ணிய குறைவாய் நடத்தல்,நிறவெறி கொண்டு உடன் விளையாடுபவர்களை சீண்டுதல்,என்று விளையாட்டு வீரர்களுக்கு ஆகாத செயல்களை புரிந்து வெற்றிமாலை சூடுவது தான் இவர்களது பிறவி குணம் .

இவர்களிடம் எல்லாம் நம்மை அவமான பட செய்த அந்த கயவர்கள் நம் கண்ணில் கிடைத்தால் அவர்களை விசாரணையின்றி தூக்கில் இட வேண்டும்.பாவம் !உயிர் பயம் அனைவருக்கும் உள்ளதுதானே.

இவர்களை சொல்லி என்ன பயன்.கடந்த நான்காண்டுகளில் இது தான் மிக பெரிய குண்டு வெடிப்பு என்று கூறுமளவுக்கு நிகழ்ந்த இந்த பயங்கரத்தை கண்டு இவர்கள் அஞ்சுவதை குறை சொல்ல முடியாது.

அதி சீக்கிரத்தில் குற்றவாளிகளை கைது செய்து இவர்கள் மத்தியில் நமது பலத்தை நிலை நாட்டுவதில் தான் நமது நாட்டின் கவுரவம் அடங்கியுள்ளது.
ஜெய் ஹிந்த்!


8 கருத்துகள்:

  1. madurin minthane neengal sollvathu 100% unmi

    பதிலளிநீக்கு
  2. கோபி அவர்களது வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  3. அப்ப இந்தியர்கள் வெளி நாடுகளுக்கு போகக் கூடது? பண்ணலாமா?

    பதிலளிநீக்கு
  4. நாம் உயிருக்கு அஞ்சியோடும் கோழைகள் அல்ல.
    நன்றி ஆட்காட்டி அவர்களது கருத்துக்கும் வருகைக்கும்

    பதிலளிநீக்கு
  5. இவனுகள் ஓடி ஓடி பிச்சை எடுத்து தான் மரியாதையக் கெடுத்து வைச்சுருக்காங்க.உங்களுக்கு அமெரிக்கன் கிரீன் காட் கிடைச்சா என்ன பண்ணுவீங்க?

    பதிலளிநீக்கு
  6. இந்தியர்களை தரகுறைவாய் பேசாதீர்கள் .நாம் எந்த ஒரு நாட்டோடும் வீண் சண்டைக்கு போகாதவர்கள் .நாம் எங்கும் பிட்சை எடுக்கவில்லை நம்முடைய உழைப்பிற்குதான் குழி பெறுகிறோம் .

    பதிலளிநீக்கு
  7. உங்களுக்கே காமடியாத் தெரியல? அப்ப ஏன் நம்மாளுக வெளி நாடுகளுக்கு ஓடிப் போறனுகள்? உள்ளுரில பிழைக்க வக்கத்ததுகளா? சோமாறிகளா?
    உழைப்புக்கு ஊதியம்? எப்படி?

    பதிலளிநீக்கு
  8. இந்தியரை பழிப்பதை நிறுத்துங்கள் ஆட்காட்டி.

    பதிலளிநீக்கு